மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
20-Oct-2024
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ முகாம் ஊரணிபட்டி நடுநிலைப் பள்ளியில் நடந்தது முகாமில் அறிவுத்திறன், செவித்திறன், பார்வைத் திறன், உடலியக்க திறன் குறையுடைய மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்கள் வழங்க மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் மருதக்காளை, ஆசிரியர் பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர்கள் செய்திருந்தனர்.
20-Oct-2024