உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மருத்துவ மாணவி தற்கொலை

மருத்துவ மாணவி தற்கொலை

விருதுநகர் : விருதுநகரைச் சேர்ந்தவர் வீரமணி, தனியார் ஊழியர். இவரின் மனைவி கனகலதா, விருதுநகர் அரசு மருத்துவமனையில் அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிகிறார்.இவர்களின் மகள் ஆதி ஸ்ரீ விவாஹா, 20. இவர், மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் முதலாமாண்டு தேர்வில், 'பிசியாலஜி' பாடத்தில் தோல்வி அடைந்தார். இந்த பாடத்திற்கான மறுதேர்வு ஆக., 1ல் நடந்தது. இந்த தேர்வில், 4 மதிப்பெண் குறைவாக பெற்றதால் தேர்ச்சி பெற முடியவில்லை. இதனால், அவர் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு துாக்கிட்டு தற்கொலை செய்தார்.விருதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ