தாயும் மகனும் இணைந்து ஓடும் மாரத்தான் போட்டி; மாவட்டத்தில் மகளிர் தின கொண்டாட்டம்
விருதுநகர் : விருதுநகரில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தாயும், மகனும் இணைந்து ஓடும் நெடுந்துார விழிப்புணர்வுமாரத்தான் போட்டியை கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தின் இருந்து காலை 6:30 மணிக்கு துவங்கி சூலக்கரை மேடு வரை சென்று மீண்டும் மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் நிறைவு அடைந்தது.இதில் கோவையைச் சேர்ந்த வசந்தி, மகன் செல்வன் மணிகண்டன் முதல் பரிசு ரூ. 30 ஆயிரம், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கரேஸ்வரி, மகன்கள் செல்வன், குருராகவ், குருசரண் ஆகியோர் இரண்டாம் பரிசு ரூ. 25 ஆயிரம், திருநெல்வேலியைச் சேர்ந்த ரதி, மகன் செல்வன் ஹரிஷ் மூன்றாம் பரிசு ரூ. 20 ஆயிரம் வென்றனர்.மேலும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கனகலெட்சுமி, மகன் செல்வன் காமேஷ்குரு நான்காம் பரிசு ரூ. 15 ஆயிரம், விருதுநகரைச் சேர்ந்த ராஜேஸ்வரி, மகன் தங்கேஸ்வரன் ஐந்தாம் பரிசு ரூ. 10 ஆயிரம் வென்றனர். இதில் திட்ட அலுவலர் தண்டபாணி, மாவட்ட விளை யாட்டு, இளைஞர் நலன் அலுவலர் குமரன்மணிமாறன் உள்பட பலர் பங்கேற்றனர்.* காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது. நிறுவனர் முகமது ஜலீல் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர்கள் சீனி முகைதீன், சீனி முகமது அலியார், நிலோபர் பாத்திமா, நாசியா பாத்திமா முன்னிலை வகித்தனர். பொருளாதார குற்றவியல் டி.எஸ்.பி., மானிஷா, வக்கீல் சிவசங்கரி பேசினர். சமூக சேவையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மகளிர் மேம்பாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியை ஜெயசாந்தி, பாண்டிமாதேவி செய்திருந்தனர்.* காரியாபட்டி லயன்ஸ் கிளப் ஆப் ஜாஸ்மின் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு நல திட்ட உதவிகள் செய்தனர். சாதனை பெண்களுக்கு விருது வழங்கி பாராட்டினர். தலைவி ராஜாத்தி, செயலாளர் கீதா, பொருளாளர் சைனிலா ரூபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.* சிவகாசி போலீசார் சார்பில் எஸ்.பி.,கண்ணன் தலைமை வகித்து விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஏ.டி.எஸ்.பிக்கள் சூரியமூர்த்தி, விஜயகுமார், அசோகன், டி.எஸ்.பி.,கள் பாஸ்கர், ராஜா முன்னிலை வகித்தனர். சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார் போலீசார், எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி மாணவிகள், டாக்டர்கள், மக்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.* சிவகாசி காக்கிவாடன்பட்டி ஆர். பொன்னுசாமி நாயுடு கல்வியியல் கல்லுாரி, கே.ஆர்.பி கலை, அறிவியல் கல்லுாரி, ஜே.சி.ஐ., சிவகாசி சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. கல்லுாரி தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். கலைக் கல்லுாரி முதல்வர் ராம்ஜெயந்தி வரவேற்றார். கல்வியியல் கல்லுாரி முதல்வர் கண்ணன் வாழ்த்தினார். சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா, கவுன்சிலர் ராஜேஷ், ஜேசி முன்னாள் தலைவர் அபிராம், ஜேசிஐ தலைவர் வெங்கடேஷ், பொருளாளர் வினோத் பேசினர். கல்லுாரி மகளிர் மேம்பாட்டுக் கழகம் தலைவர் உஷா ஷாலினி நன்றி கூறினார்.* சிவகாசி காளீஸ்வரி கல்லுாரி உள்புகார் குழு, மாணவர்கள் ஆலோசனைக் குழு மகளிர் மேம்பாட்டு அமைப்பு சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். சென்னை, இந்திய தொழில்நுட்ப கழகம் உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல் துறை உதவி பேராசிரியர் ஹேமா பிரபா பேசினார். உறுப்பினர் கவி பாரதி நன்றி கூறினார்.* அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை அறிவியலின் கல்லூரி, ரமணாஸ் கல்வியியல் கல்லூரி சார்பாக, நடந்த விழாவிற்கு கல்லூரி சேர்மன் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பி.எட்., கல்லூரி செயலர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார். கலை கல்லூரி செயலாளர் இளங்கோவன் வரவேற்றார். அருப்புக்கோட்டை தாலுகா இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி கலந்து கொண்டு பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் ,போக்சோ சட்டம், அலைபேசியால் பெண்களுக்கு ஏற்படும் தீமைகள், பற்றி விளக்கினார்.கல்லூரி முதல்வர்கள் தில்லைநடராஜன், ராஜேந்திரன் கலந்து கொண்டனர். துணை முதல்வர் பெளர்ணா நன்றி கூறினார்.* சத்திரப்பட்டி ஆறுமுகம் பழனி குரு பெண்கள் கலை அறிவியல் கல்லுாரியில் கல்வி குழும தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். தாளாளர் பழனி குரு முன்னிலை வகித்தார். முதல்வர் நாகலட்சுமி வரவேற்றார். போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கணினி துறை பேராசிரியை ரூபாவதி நன்றி கூறினார். * ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் கோவை அவிநாசிலிங்கம் கல்லுாரி பேராசிரியை ஞானாம்பிகா , பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பெற்றோர் ஆசிரியர்களின் பங்கு, சமுதாயத்தில் முக்கியத்துவம், அலைபேசி மூலம் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பேசினார். முதல்வர் கணேசன் தலைமை வகித்தார். விக்னேஸ்வரி முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை முனைவர் காந்திமதி தலைமையில் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.