முளைப்பாரி ஊர்வலம்
நரிக்குடி: நரிக்குடி இருஞ்சிறையில் மந்தை அம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா நடந்தது.திருவிளக்கு பூஜை, சிறப்பு தீபாராதனை நடந்தது. மாவிளக்கு எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று அங்குள்ள கண்மாயில் கரைத்தனர். *அதே போல் நாலூர் முத்துமாரியம்மன், சக்திமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி எடுத்துச் சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று அங்குள்ள கண்மாயில் கரைத்தனர். அன்னதானம் நடந்தது.