உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகளுக்கு விழிப்புணர்வு தேவை: வழிமுறை தெரியாமல் சிகிச்சை பெற தவிப்பு

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகளுக்கு விழிப்புணர்வு தேவை: வழிமுறை தெரியாமல் சிகிச்சை பெற தவிப்பு

ராஜபாளையம்: எளிய மக்கள் பயனடையும் வகையில் மத்திய மாநில அரசுகள் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ள மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் குறித்து மக்கள் போதிய விழிப்புணர்வு இன்றி சிகிச்சையின் போது தவிக்கும் சூழல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் இது குறித்து விழிப்புணர்வை அதிகப்படுத்துவது அவசியமாகிறது.மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டத்திலும், மாநில அரசு முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்திலும் விபத்துக்கள், உடல் பாதிப்பு ஏற்படும் காலங்களில் மருத்துவ தேவைகளுக்கு கை கொடுக்கும் வகையில் ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்குகின்றன.இந்நிலையில் வழிமுறை, விழிப்புணர்வு இல்லாததால் ஒரு சாரர் விண்ணப்பிக்காமல் இருந்து வருகின்றனர். இக்கட்டான அவசர காலத்தில் இருக்கும் போது பெருளாதார சிரமங்களை எதிர் கொள்ளும் போது தான் இத்திட்டத்தில் இணையாதது குறித்து கவலை கொள்கின்றனர். இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததுடன் அனைவரும் இதில் பதிவு செய்யாமல் உள்ளனர்.விபத்து உள்ளிட்ட அவசர காலங்களில் தனியார், அரசு மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீட்டு அட்டை உள்ளதா என்ற கேள்விக்கு அதன் பிறகு அது பற்றி தேடுகின்றனர்.இது தவிர ஏற்கனவே மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற ஆயுள் காப்பீடு மூலம் ரூ.438ம், சுரக்ஷா பீமா யோஜனா எனும் விபத்து காப்பீடு மூலம் ரூ.20ம் வங்கிகளின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாளர்களிடம் தொகை பிடித்தம் செய்து மத்திய அரசின் காப்பீட்டு திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. ஆயுள், விபத்து காப்பீடு மூலம் ரூ.2 லட்சம் வரையில் பணம் வழங்கப்படகிறது.விபத்தினால் உயிரிழப்பு ஏற்பட்ட பின் குடும்பத்தினருக்கு அது குறித்து வங்கி மூலம் அரசிடம் காப்பீட்டிற்கு விண்ணப்பிக்க தெரியாமல் விட்டு விடுகின்றனர்.குறிப்பாக விபத்தினால் ஏற்படும் மரணத்திற்கும் குறிப்பிட்ட வயது வரை இயற்கை மரணத்திற்கும் ரூ.2 லட்சம் வரை இழப்பீடு பெற உரிமை இருந்தும் தெரியாமல் உள்ளனர்.பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் தொடங்கி அடித்தட்டு தொழிலாளர்கள், தனியார் ஊழியர்கள், முறைசாரா அமைப்பு தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பிலும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் உண்மையான நோக்கத்தினை கொண்டு செல்வது அவசியம்.இது குறித்து அந்தந்த பகுதி கவுன்சிலர், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் விடுபட்டவர்கள் பற்றி கணக்கெடுத்து காப்பீட்டு பதிவு முகாம் ஏற்பாடு செய்வதுடன் விபத்து காலங்களில் நடைமுறைகள் குறித்த கவனம் செலுத்தி உதவி செய்வதன் மூலம் காப்பீட்டுக்கான நோக்கத்தை விரிவு படுத்த முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை