உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வெப்பச்சலனத்தால் மக்கள் கடும் அவதி

வெப்பச்சலனத்தால் மக்கள் கடும் அவதி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் முழுவதும் கோடை துவங்கும் முன்பே மார்ச்சிலேயே கடுமையாகவெயிலின் தாக்கம் உள்ளது. மதிய நேரங்களில் அதிகமாக காணப்படும் வெப்பச்சலனத்தால் மக்கள் கடும் அவதியை சந்திக்கின்றனர்.தமிழகம் முழுவதும் இந்தாண்டு மே மாதமேஅக்னி நட்சத்திரம் வரவுள்ள நிலையில் தற்போதே கோடையை போல் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மக்கள் இப்போதே கோடை மழை பெய்யாதா என எதிர்பார்க்க துவங்கி விட்டனர். பருவநிலை மாற்றத்தால் பிப். இறுதியில் மழை பெய்தாலும், அந்த தடமே இல்லாத அளவுக்கு இப்போது வெப்பச்சலனம் அதிகமாக உள்ளது. பிப். 15க்கு பின் ஒரு மாதமாக கடுமையான வெயில் விருதுநகர் மக்களை வாட்டி வருகிறது.மதிய நேரத்தில் வெப்பச்சலனத்தோடு மக்கள் வெளியில் நடமாட முடிவதில்லை. இதனால் மார்க்கெட், கடைகளுக்கு மாலை நேரங்களில் செல்கின்றனர்.பணிக்கு செல்பவர்களும் சிரமத்தை சந்திக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ