| ADDED : மே 30, 2024 02:15 AM
விருதுநகர்: விருதுநகர் அருகே சூலக்கரையில் இருந்து அரசக்குடும்பன்பட்டி ரோட்டில் குல்லுார் சந்தை அணை உபரி நீர் செல்லும் பாலத்தில் கனமழையால் மண் அரிப்பு ஏற்பட்டு வாகனத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது.சூலக்கரையில் இருந்து அரசன்குடும்பன்பட்டி செல்வதற்காக குல்லுார்சந்தை அணை உபரி நீர் செல்லும் பாதையில் பாலம் அமைக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தினமும் வேலைக்கு செல்பவர்கள் இந்த பாலத்தை கடந்து விருதுநகருக்கு வந்து சென்றனர்.மாவட்டத்தில் 2023 டிச. 18, 19 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் குல்லுார்சந்தை அணை நிறைந்து இந்த பாலத்தை தாண்டி வெள்ளம் சென்றது. இந்த வெள்ளத்தில் பாலத்திற்கு செல்லும் இரு பாதைகளிலும் மண் அரிப்பு ஏற்பட்டது.இந்த மண் அரிப்பால் வாகனங்களில் செல்ல முடியாமல் பாலம் துண்டிக்கப்பட்டது. இதனால் அரசக்குடும்பன்பட்டியில் இருந்து பாலவநத்தம், குல்லுார்சந்தை என 8 கி.மீ., சுற்றி விருதுநகருக்கு செல்ல வேண்டியுள்ளது. இது குறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மருத்துவ அவசரத்திற்கு கூட செல்ல முடியாமல் அரசக்குடும்பன்பட்டி மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே பாலத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.