உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குடிநீரை தேடி அலையும் மக்கள்

குடிநீரை தேடி அலையும் மக்கள்

திருச்சுழி:திருச்சுழி அருகே குடிநீரைத் தேடி மக்கள் குடங்களுடன் அலைகின்றனர்.திருச்சுழி ஒன்றியத்தை சேர்ந்த வடக்குநத்தம் ஊராட்சிக்கு உட்பட்டது தெற்குநத்தம் கிராமம். இங்கு ஊராட்சி மூலம்தண்ணீர் வழங்கப்படுகிறது. தண்ணீர் உப்புத்தன்மையுடன் இருப்பதால் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை. ஊரில் உள்ள ஊருணி அருகில் கிணறு ஒன்று உள்ளது. அதில் வரும் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்ற நிலையில் இருக்கிறது.எண்ணற்றற்கு செல்லும் பாதை தடுப்புச் சுவர் அமைக்க 2022 இல் ரூ.10 லட்சம் நிதியில் கிணற்றைச் சுற்றி தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டது. கிணற்றைச் சுற்றி தளம் அமைக்காததால் சேறும் சகதியும் ஆக கிணற்றில் தண்ணீர் எடுக்க பெண்கள் சிரமப்படுகின்றனர். கிணற்றில் மூடி போடாமல் பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ளது. ஊரில் இந்த கிணற்றைத் தவிர வேறு எங்கும் நல்ல குடிநீர் இல்லை. இதனால் பெண்கள் குடிநீரை தேடி குடங்களுடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.ஊராட்சி மூலம் தெற்கு நத்தம் கிராமத்திற்கு முறையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி