இன்று பிளஸ் 1 பொதுத்தேர்வு துவக்கம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் இன்று பிளஸ் 1 பொதுத்தேர்வு துவங்குகிறது.விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 4425 மாணவர்கள் 5178 மாணவிகள் என 9603 பேரும், சிவகாசி கல்வி மாவட்டத்தில் 5777 மாணவர்கள், 6798 மாணவிகள் என 12 ஆயிரத்து 575 என இரு கல்வி மாவட்டங்களை சேர்த்து மாவட்டத்தில் 222 பள்ளிகளை சேர்ந்த 22 ஆயிரத்து 178 மாணவர்கள் 98 மையங்களில் தேர்வெழுதுகின்றனர். இதில் 153 மாற்றுத்திறனாளி மாணவர்களும் அடங்கும்.தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, மின்சாரம், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 5 இடங்களில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, 21 வழித்தட அலுவலர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் மூலம் 24 மணி நேரமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இத்தேர்வு நடக்கும் அனைத்து தேர்வு மையங்களில் 98 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 98 துறை அலுவலர்கள், 1927 அறைக் கண்காணிப்பாளர்கள், 7 பறக்கும்படை குழுவில் 28 உறுப்பினர்கள், தேர்வு மையங்களில் 166 நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு, தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்க கண்காணிக்கின்றனர்.