உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் தொடரும் வனவிலங்குகள் வேட்டை அவசியமாகிறது போலீஸ் செக்போஸ்ட்

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் தொடரும் வனவிலங்குகள் வேட்டை அவசியமாகிறது போலீஸ் செக்போஸ்ட்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் தொடரும் வனவிலங்குகள் வேட்டையை தடுக்கவும், சமூக விரோதிகளை கண்காணிக்கவும் நுழைவு பகுதியில் போலீஸ் செக் போஸ்ட்டுகள் அமைக்க வேண்டும்.மாவட்டத்தின் சுற்றுலா, ஆன்மிக தலமாக தேவதானம் சாஸ்தா கோயில், ராஜபாளையம் அய்யனார் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ராக்காச்சியம்மன் மற்றும் பேச்சியம்மன், காட்டழகர் கோயில்கள், வத்திராயிருப்பு பிளவக்கல் பெரியாறு அணை பகுதிகள் உள்ளன.மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டால் அதிகளவில் மக்கள் மலையடிவார பகுதிகளுக்கு வருவது வழக்கம்.இந்நிலையில் மலையில் இருந்து அடிவார தோப்புகளுக்கு வரும் மான்கள், காட்டு பன்றிகளை சமூக விரோதிகள் வேட்டையாடுகின்றனர். இதனையடுத்து வனத்துறையினர் இரவு பகலாக தீவிர கண்காணிப்பு செய்து வருகின்றனர். பலரை பிடித்து வழக்கு பதிந்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தி வருகின்றனர்.ஆனால் 484 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியை பாதுகாக்க வனத்துறையில் போதுமான அளவிற்கு களப் பணியாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் இல்லை.வேட்டையை தடுக்க மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளுக்கு செல்லும் ரோடுகளில், 24 மணிநேரமும் செயல்படும் போலீஸ் செக்போஸ்ட்டுகள் அமைப்பது அவசியமாகும். இதற்கு மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகள், மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ