உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி

தற்கொலைசாத்துார்: சாத்துார் ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து 32. இவர் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனவிரக்தி அடைந்த காளிமுத்து வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.நகை திருட்டு; பெண் கைதுஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெய் கிறிஸ்டி 46, சிவகாசியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஆகஸ்ட் 29 அன்று வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது வீட்டின் பீரோவில் இருந்த 5 தங்க நகைகள் திருடப் பட்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார், இருளாயி 49, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !