மேலும் செய்திகள்
நாளை மின்தடை (ஆக.21)
20-Aug-2024
பட்டாசு திரி பதுக்கியவர் கைதுவிருதுநகர்: ஒ.சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் மோகன்குமார் 33. இவர் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் 200 குரோஸ் வெள்ளைத் திரிகளை பதுக்கி வைத்திருந்ததால் போலீசார் கைது செய்தனர்.அடையாளம் தெரியாத பெண் உடல்விருதுநகர்: ஆர்.ஆர்.நகர்., தனியார் ஆலைக்கு சொந்தமான காலி இடத்தில் அடையாளம் தெரியாத நீல நிற சேலை அணிந்த 40 வயது மதிக்கதக்க பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததை நேற்று முன்தினம் போலீசார் கண்டறிந்து விசாரிக்கின்றனர்.விபத்தில் பலி சாத்துார்: துாத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு சேர்ந்தவர் பசுபதிராஜ், 58. இவரது மருமகன் பூவேந்திரன், 32. செப். 3 இரவு 11:00 மணிக்கு டூவீலரில் (இருவரும் ஹெல்மெட் அணியவில்லை) சாத்துார் வந்தனர். என்.வெங்கடேஷ்வரபுரம் விலக்கருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் ரோட்டின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இருவரும் படுகாயம் அடைந்தனர். நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணிக்கு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியில் பசுபதிராஜ் பலியானார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
20-Aug-2024