போலீஸ் செய்திகள்
பட்டாசு திரி பறிமுதல்சிவகாசி மத்தியசேனையை சேர்ந்த ரவிக்குமார், டிரைகன் பிளைட் என்ற புட்டுவெடிக்கான திரிகளை அவரது வீட்டின் அருகில் வைத்திருந்தது ஆமத்துார் போலீசார் சோதனையில் தெரிந்தது. இதே போல் ஓ.சங்கரலிங்காபுரம் காமாட்சி டூவீலரில் கொண்டு சென்ற போது போலீசார் சோதனையில் வெள்ளை திரி இருப்பது தெரிந்தது. இருவர் மீதும் வழக்கு பதிந்து ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.