உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி

தற்கொலைசாத்துார்: சாத்துார் நல்லமுத்தன்பட்டியை சேர்ந்தவர் சுப்புத்தாய், 70. நீண்ட நாட்களாக முதுகுவலியால் அவதிப்பட்டு வந்தார். மனவிரக்தியில் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பலியானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.சிறுமி கர்ப்பம்: வாலிபர் மீது போக்சோ சாத்துார்: சாத்துார் அமீர்பாளையத்தை சேர்ந்தவர் நாராயணன் மகன் பால்பாண்டி, 30.சிவகாசியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்தார். இருவர் வீட்டிலும் பெரியவர்கள் இல்லாத நிலையில் இருவரும் கொல்லப்பட்டி வாடகை வீட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தினர். சிறுமி மூன்று மாதம் கர்ப்பமானார். சிகிச்சைக்கு சென்ற போது அவருக்கு வயது 16 என தெரியவந்தது.மகளிர் ஊர் நல அலுவலர் மாரியம்மாள் புகார்படி சாத்துார் அனைத்து மகளிர் போலீசார் வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.மாணவி மாயம்சாத்துார்: சாத்துார் நாருகாபுரத்தை சேர்ந்தவர் பரிமளா காந்தி இவரது 15 வயது மகள் சாத்துார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். பிப். 27 இரவு வீட்டில் இருந்த மாணவி மாயமானார். இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை