உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்/

2 பவுன் செயின் திருட்டுவிருதுநகர்: விருதுநகர் மெட்டுக்குண்டு காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஆரோக்கியராஜ் 40. இவர் விவாகரத்து பெற்று 2வது திருமணத்திற்காக மேட்ரிமோனியில் பதிந்திருந்தார். அதன் பேரில் தொடர்பு கொண்டு இவரது வீட்டிற்கு 2 பெண்கள் வந்தனர். தங்களிடம் பெண்கள் ஜாதகம் இருப்பதாக கூறி திருமண ஏற்பாடுகள் பற்றி பேசி வீட்டை சுற்றி பார்க்க வேண்டும் என்றனர். அவ்வாறு பார்க்கும் போது குடிக்க தண்ணீர் கேட்டனர். ஆரோக்கியராஜ் சமையலறைக்கு சென்ற போது, வீட்டின் சிலாப்பில் வைத்திருந்த 2 பவுன் தங்க செயினை எடுத்து விட்டு இருவரும் மாயமாகினர். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.கஞ்சா: இருவர் கைதுராஜபாளையம்: ராஜபாளையம் மதுரை ரோட்டில் கஞ்சா விற்பனை செய்த மாப்பிள்ளை சுப்பையா தெருவை சேர்ந்த மணிகண்ட பிரபு 22, சிரஞ்சீவி 27, இருவரும் கஞ்சா வைத்திருப்பதும் விற்பனைக்காக 1கிலோ 150 கிராம் கஞ்சா பதுக்கியதையும் வடக்கு போலீசார் பறிமுதல் செய்து கைது செய்துள்ளனர்.ரயிலில் கடத்திய1300 கிலோ அரிசி பறிமுதல்விருதுநகர்: மதுரை - புனலுார் பாசஞ்சர் ரயிலில் இரவு நேரங்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 12:30 மணிக்கு விருதுநகர் வந்த ரயிலில் சோதனையிட்ட போது 5 சிப்பங்களில் 1300 கிலோ ரேஷன் அரசி ரயில்வே போலீசார் முன்பதிவில்லா பெட்டியில் கிடந்தது. அந்த பெட்டியில் பயணிகள் யாருமில்லை. இதை குடிமைப்பொருள் போலீசாரிடம், ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ