உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 10 கிராம, 12 நகர்ப்புற மாதிரிகளில் தேசிய மாதிரி ஆய்வு ஆயத்தம்

10 கிராம, 12 நகர்ப்புற மாதிரிகளில் தேசிய மாதிரி ஆய்வு ஆயத்தம்

விருதுநகர் : மாவட்டத்தில் 10 கிராம, 12 நகர்ப்புற மாதிரிகளில் திட்டமிடல், வளர்ச்சிக்கான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தேசிய மாதிரி ஆய்வில், 80வது சுற்றுக்கான பணிகள் செய்யப்பட உள்ளது என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்.அவரது செய்திக்குறிப்பு: மாநில அரசின் பொருளியல், புள்ளியியல் துறை அலுவலர்களால் 80வது தேசிய மாதிரி ஆய்வு (2025 ஜன. முதல் 2026 ஜூன் வரை), முழுமையான சுகாதார ஆய்வு (2025 ஜன. முதல் டிச. வரை), உள்நாட்டுச் சுற்றுலா செலவு கணக்கெடுப்பு (2025 ஜூலை முதல் 2026 ஜூன் வரை), தேசிய அளவில் குடும்பப் பயண ஆய்வு (2025 ஜூலை முதல் 2026 ஜூன் வரை) ஆகிய தலைப்புகளில் சமூக பொருளாதார ஆய்வு செய்யப்பட உள்ளது. இவ்வாய்வு சுகாதாரத் துறை குறித்த அடிப்படை அளவு தகவல்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செய்யப்பட உள்ளது.மாவட்டத்தில் சிறுகுளம், வடகரை, திருச்சுழி, செட்டிகுறிச்சி, திப்பம்பட்டி, விஜயகரிசல்குளம், கல்லுமடம், சிங்கநாதபுரம், சூரங்குடி, பச்சகுளம் ஆகிய 10 கிராமப்புற மாதிரிகளிலும், ராஜபாளையம்(2), பள்ளபட்டி, திருத்தங்கல், கூரைக்குண்டு, பாலையம்பட்டி, அருப்புக்கோட்டை(2), சத்திரபட்டி, சேத்துார், விருதுநகர், தளவாய்புரம் ஆகிய 12 நகர்ப்புற மாதிரிகளிலும் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.பொருளியல், புள்ளியியல் துறை சார்ந்த அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் விவரங்களை சேகரிப்பதற்காக வரும் பொழுது மக்கள் உண்மையான புள்ளி விவரம் அளித்து ஒத்துழைக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி