உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விதிமீறிய இரு பட்டாசு ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை

விதிமீறிய இரு பட்டாசு ஆலைகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை

சிவகாசி : தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழில் தனி தாசில்தார் திருப்பதி தலைமையிலான அதிகாரிகள் சிவகாசி அருகே காரிசேரியில் பாண்டியராஜனின் டி.ஆர்.ஓ உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் விதிமீறி பேன்சி ரக பட்டாசுகளை உற்பத்தி செய்ததை அறிந்தனர்.அதேபோல் விருதுநகர் அருகே ஒண்டிப்புலிநாயக்கனுாரில் உள்ள ராஜலட்சுமியின் பாப்பா பட்டாசு ஆலையில் மணி மருந்து அதிகளவில் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.இதையடுத்து இரு பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ