டிரான்ஸ்பார்மரில் துாக்கிட்டு ஆய்வாளர் தற்கொலை
ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செவல்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் 43. இவர் ராஜபாளையம் முடங்கியார் ரோடு திருவள்ளுவர் நகர் மின்பகிர்மான அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மதியம் 3:00 மணி முதல் இவரை காணவில்லை. மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய காட்டுப் பகுதியில் இருப்பதாக அலைபேசி டவர் சிக்னல் காட்டியது.புல்லுப்பத்தி மலையடிவாரத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். மகளுக்கு ஒரு வாரம் முன் திருமணம் நடந்துள்ளது.