உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காட்டு மாடு முட்டி உயிரிழந்த மூதாட்டி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

காட்டு மாடு முட்டி உயிரிழந்த மூதாட்டி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

ராஜபாளையம் : சேத்துார் அருகே மலை அடிவாரத்தில் காட்டு மாடு முட்டி பலியான சுந்தரம்மாள் 65, குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சத்திற்கான இழப்பீடு அறிவிக்கப்பட்டு முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. ராஜபாளையம் அருகே கணபதி சுந்தரநாச்சியார்புரம் கிராமத்தை சேர்ந்த அய்யாச்சாமி மனைவி சுந்தரம்மாள் 65, நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் பங்களா காடு பகுதியில் புல் அறுக்க சென்றபோது காட்டு மாடு தாக்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.வனத்துறையினர், சேத்துார் ஊரக போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு வனவிலங்கினால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தனர். நேற்று ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு பின் அவரது மகன் மாரியப்பனிடம் ரூ. 50 ஆயிரத்திற்கான காசோலையை முதற் கட்டமாக தாசில்தார் ராமசுப்பிரமணியன் முன்னிலையில், வனச்சரகர் கார்த்திகேயன் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை