மேலும் செய்திகள்
விஜய கரிசல்குளம் அகழாய்வில் சதுரங்க ஆட்ட காய்கள்
11-Aug-2024
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளம் 3 ம் கட்ட அகழாய்வு பணிகளை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.விஜய கரிசல்குளத்தில் 3 ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், பெண்ணின் தலைப்பகுதி, சூது பவள மணி என 1600 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.அகழாய்வு பணிகளையும், கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் பார்வையிடுவதற்கு பல்வேறு பள்ளி கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்கள் வருகின்றனர். இந்நிலையில் அகழாய்வு பணிகளையும், கண்டெடுக்கப்பட்ட பொருட்களையும் பார்வையிடுவதற்காக சிவகாசி லயன்ஸ் பள்ளி மாணவர்கள் வந்திருந்தனர்.இவர்கள் அகழாய்வு பணிகளையும், கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறித்தும் கேட்டறிந்தனர். அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி, மாணவர்களுக்கு விளக்கினார்.
11-Aug-2024