சிவகாசி பஸ்கள் தாமதம்: ஸ்ரீவி., பயணிகள் அவதி
ஸ்ரீவில்லிபுத்துார்:சிவகாசியில் இருந்து வரும் பஸ்கள் காலதாமதமாக வருவதால், காலையில் வேலைக்கு செல்வோர், கல்லுாரி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த ஏராளமான மக்கள் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகள், அச்சகங்கள் உட்பட பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இதுபோல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் -சிவகாசி வழித்தடத்தில் இயங்கும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் அதிகளவில் பயணித்து வருகின்றனர். இதனால் காலை 7:30 மணி முதல் 10:30 மணி வரையிலும் மிகுந்த சிரமத்துடன் பஸ்களில் பயணித்து வருகின்றனர்.இந்நிலையில் சிவகாசியில் ரயில்வே மேம்பால பணிகள் நடப்பதால் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளால் அனைத்து பஸ்களுமே 10 முதல் 20 நிமிடம் காலதாமதமாக வருகிறது. இதனால் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கும், கல்லுாரிக்கும் செல்ல முடியாமல் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த தொழிலாளர்களும், கல்லுாரி மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.எனவே காலை, மாலை பீக் ஹவர்சில் சில பஸ்களை சாட்சியாபுரம் வரை சென்று திரும்பும் வகையில் இயக்க வேண்டும் என கல்லுாரி மாணவர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.