உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சமூக நீதி விழிப்புணர்வு கூட்டம்

சமூக நீதி விழிப்புணர்வு கூட்டம்

திருச்சுழி : திருச்சுழி வைத்தியலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளியில் சமூக நீதி விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. விருதுநகர் சமூக நீதி, மனித உரிமைகள் போலீஸ் ஸ்டேஷன் சார்பாக நடந்த கூட்டத்தில் தலைமை ஆசிரியர் செல்வராஜ் வரவேற்றார். எஸ்.ஐ., க்கள் வகுளாதேவி, தங்கப்பாண்டி, சந்திரசேகர், புள்ளியியல் ஆய்வாளர் விஜயலட்சுமி, ஒருங்கிணைந்த சேவை மைய ஜோஸ்பின்மேரி, தலைமை காவலர் நீலவேணி ஆகியோர் கலந்து கொண்டனர்.பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு, இளம் வயதில் திருமணம் தவிர்த்தல், அலைபேசி பயன்பாடுகளை தவிர்த்தல், பெண் கல்வி ஊக்குவிப்பு, பொருளாதார முன்னேற்றம், திறன் மேம்பாட்டு பயிற்சி உட்பட விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி