மேலும் செய்திகள்
ஆதிதிராவிடர் நலத்துறையில் பணி ஆணை வழங்கல்
05-Sep-2024
21 நாளில் மக்கள் குறைகளை தீர்க்க முடியும்!
28-Aug-2024
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு மலைவாழ் மக்களுக்கு கட்டப்பட்ட புதிய குடியிருப்புகள் திறப்பு விழா நடந்தது.ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பில் 30 மலைவாழ் மக்கள் குடும்பத்தினர்வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இவர்களது வீடுகள் மிகவும் சேதமடைந்து குடியிருக்க தகுதியற்ற நிலையில் இருந்தது.இதுகுறித்து அப்பகுதி மலைவாழ் மக்கள் தங்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மனு செய்திருந்தனர். இதனை நேரடி ஆய்வு செய்த நீதிபதி குழுவினர், சேதமடைந்த வீடுகளுக்கு புதிய வீடுகள் கட்டித்தர மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்திருந்தனர்.இதனடிப்படையில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தலா ரூ 3 லட்சம் வீதம் 7 வீடுகள் ரூ 21 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.இதனை நேற்று காலை 11:15 மணிக்கு கலெக்டர் ஜெயசீலன் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து, 7 பயனாளிகளுக்கு வீட்டு சாவிகளை ஒப்படைத்தார்.விழாவில் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் ரமேஷ், தாசில்தார் செந்தில்குமார், மம்சாபுரம் பேரூராட்சி கவுன்சிலர் தங்க மாங்கனி, செயல் அலுவலர் ரமேஷ், தாசில்தார் விஜி மாரி, வனச்சரகர் செல்வமணி பங்கேற்றனர்.அப்போது தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தருதல், ஜாதி சான்றிதழ், ரேஷன் கார்டு, இருப்பிட சான்றிதழ் கோரி மக்கள் மனு கொடுத்தனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் ஜெயசீலன் உறுதி அளித்தார்.
05-Sep-2024
28-Aug-2024