அரசு பள்ளியில் மாணவர்களுக்கான நட்சத்திர பார்வை
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பட்டம்புதுார் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான நட்சத்திர பார்வை நிகழ்வு நடந்தது. மாணவர்கள் தொலைநோக்கி மூலம் விண்வெளியில் உள்ள கோள்கள், நட்சத்திரங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு, விண்வெளி குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும், விண்வெளி குறித்த ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையிலும் நடத்தப்பட்ட இந்த நட்சத்திர பார்வை நிகழ்வை கலெக்டர் ஜெயசீலன் துவங்கி வைத்தார். ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.