உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போக்குவரத்து நெருக்கடியில் வத்திராயிருப்பு

போக்குவரத்து நெருக்கடியில் வத்திராயிருப்பு

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. எனவே, பைபாஸ் ரோடு அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.வத்திராயிருப்பு தாலுகாவில் ஆண்டுக்காண்டு குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில் வாகன போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. இத்தாலுகாவில் கூமாபட்டி, கான்சாபுரம், புதுப்பட்டி, கோட்டையூர் மகாராஜபுரம் பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிவகாசி பட்டாசு ஆலையில் பணியாற்ற செல்வதால், பட்டாசு ஆலை பஸ்களும் தினமும் அதிகளவில் வந்து செல்கிறது.சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.குறிப்பாக காலை, மாலை வேலை நேரத்தில் ரோட்டடி தெரு முதல் அரசு மருத்துவமனை வரை கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அதிலும் முத்தாலம்மன் கோவில் பஜாரில் பல நேரங்களில் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் எளிதில் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.எனவே, எதிர்கால மக்கள் நலன் கருதி வத்திராயிருப்பில் பைபாஸ் ரோடு அமைக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை