உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குழாய் பணிக்கு தோண்டப்பட்ட ரோடு ஒரு மாதமாகியும் மூடப்படவில்லை

குழாய் பணிக்கு தோண்டப்பட்ட ரோடு ஒரு மாதமாகியும் மூடப்படவில்லை

விருதுநகர் : விருதுநகர் அல்லித்தெருவில் ஒரு மாதமாக குடிநீர் குழாய் பதிப்பு பணிக்காக தோண்டப்பட்ட ரோடு சரி செய்யப்படாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.விருதுநகரில் ரயில்வே பீடர் ரோடு போடப்பட்டது. அருப்புக்கோட்டை - சாத்துார் - விருதுநகர் தாமிரபரணி குடிநீர் திட்டத்திற்கான 2ம் கட்ட குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ரோடு போடும் முன் குழாய் பதிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் கோரிக்கை வைத்து வந்த நிலையில், ஒரு மாதம் முன் குடிநீர் வடிகால் வாரியம் குழாய் பதித்தது. அருகில் உள்ள அல்லித்தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் தெருக்களுக்கான இணைப்பு வழித்தடம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் ரயில்வே பீடர் ரோடு போடப்பட்டது. தற்போது ஒரு மாதம் ஆகியும் இப்போது வரை அல்லித்தெருவில் குடிநீர் குழாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படவே இல்லை. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. விரைவில் பங்குனி பொங்கல் நடக்க உள்ளது. பக்தர்கள் அக்கினி சட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன் எடுப்பர். ரம்ஜானை யொட்டி அருகே மசூதியும் உள்ளதால் பலரும் வழிபாட்டுக்கு வருவர். எனவே இந்த பள்ளத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும். மேலும் இது போன்று நகரின் பல பகுதிகளில் குடிநீர் பணிக்காக ரோடு தோண்டப்பட்டு மூடப்படாமல் உள்ளது. அவற்றையும் கண்டறிந்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி