உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மீன் பிடிப்பதற்காக தான் விரித்த வலையில் சிக்கியவர் பலி

மீன் பிடிப்பதற்காக தான் விரித்த வலையில் சிக்கியவர் பலி

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் அருகே கண்மாயில் மீன் பிடிப்பதற்காக தான் விரித்த வலையில் சிக்கியவர் நீச்சல் அடிக்க முடியாமல் பலியானார்.ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா கலங்காப்பேரி புதுரை சேர்ந்தவர் தர்மர், 55, இவர் நேற்று முன்தினம் மதியம் 3:00 மணிக்கு வேப்பங்குளம் கண்மாயில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது தண்ணீரில் இறங்கி வலைவிரித்த போது, தான் விரித்த வலையில் சிக்கி நீச்சல் அடிக்க முடியாமல் தண்ணீரில் மூழ்கினார். ஸ்ரீவில்லிபுத்துார் தீயணைப்பு துறை அலுவலர் முத்து செல்வம் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் கண்மாயின் நடுப்பகுதியில் உயிரிழந்த நிலையில் தர்மர் உடலை மீட்டனர். வன்னியம்பட்டி போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ