மேலும் செய்திகள்
வீணாகும் தாமிரபரணி குடிநீர் சீரமைக்க எதிர்பார்ப்பு
16 hour(s) ago
கல்லுாரியில் கருத்தரங்கம்
16 hour(s) ago
ராஜபாளையத்தில் அனுமன் ஜெயந்தி
16 hour(s) ago
அருப்புக்கோட்டை : மதுரை -- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள எலியார்பத்தி டோல்கேட்டில் கூட்ட நெரிசல் இருப்பதால் கூடுதல் கவுண்டர்களை திறக்க விருதுநகர் மாவட்ட பஸ் உரிமையாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்.மதுரை -- தூத்துக்குடி அருப்புக்கோட்டை வழியாக செல்லும் 4 வழி சாலையில், எலியார் பத்தியில் ஒரு சுங்கச்சாவடி (டோல்கேட்) உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இங்கு கட்டணம் செலுத்தி வந்து செல்கின்றன. போக, வர உள்ள 2 ரோடுகளில் 4 கவுண்டர்கள் உள்ளன. ஆனால், ஒரே ஒரு கவுன்டர் மட்டும் செயல்படுவதால் வாகனங்கள் காத்திருந்து கட்டணம் செலுத்தி செல்ல வேண்டியுள்ளது. மேலும், இந்த வழியாக செல்லும் பஸ்கள் காத்திருந்து செல்வதால், நேரத்திற்கு பஸ் செல்ல முடியாமல் தாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க 4 கவுன்டர்களும் செயல்பட நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விருதுநகர் மாவட்டம் பஸ் உரிமையாளர் சங்க செயலாளர் மகாலிங்கம் விருதுநகர் மாவட்ட கலெக்டர், நகாய் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago