மேலும் செய்திகள்
கூடுதல் பஸ் இயக்க மக்கள் வலியுறுத்தல்
25-Feb-2025
கூடுதல் பஸ் இயக்குங்க
21-Feb-2025
சிவகாசி : வெம்பக்கோட்டை சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே அரசு பஸ்கள், மினி பஸ்கள் இயக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.வெம்பக்கோட்டையில் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். விஜய கரிசல் குளம், வன மூர்த்தி லிங்கபுரம், கோமாளிப்பட்டி, இந்திராநகர், கண்டியாபுரம், எழுவன் பச்சேரி இனாம் மீனாட்சிபுரம் விளாம்பரத்துப்பட்டி, சூரார்பட்டி, கோட்டைப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப் பகுதியாக வெம்பக்கோட்டை உள்ளது. இக்கிராமங்கள் அனைத்துமே வெம்பக்கோட்டையை சுற்றிலும் 3 கி.மீ, முதல் 8 கி.மீ., துாரத்தில் உள்ளது. இந்த கிராமங்களுக்கு இதுவரையில் அரசு பஸ் வசதி இல்லை. வெம்பக்கோட்டையில் தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், உதவி தொடக்க கல்வி அலுவலகம், வேளாண் துறை அலுவலகம், வங்கி உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இயங்குகின்றன.தவிர பட்டாசு ஆலைகள் அதிக அளவில் உள்ளன. இதனால் பல்வேறு தேவைகளுக்கும் இங்கு வருகின்ற மக்கள் பஸ் வசதி இல்லாமல் ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்து வர வேண்டி உள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் ஆட்டோவில் கட்டணம் செலுத்தி வர வசதியின்றி நடந்தே வருகின்றனர். எனவே வெம்பக்கோட்டையில் இருந்து சுற்றுப் பகுதி கிராமங்களுக்கு, அரசு பஸ்கள், மினி பஸ்கள் இயக்க வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
25-Feb-2025
21-Feb-2025