உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / எனக்கும் விருதுநகருக்கும் பந்தம் விட்டு போகவில்லை: தே.மு.தி.க., வேட்பாளர் விஜயபிரபாகரன்

எனக்கும் விருதுநகருக்கும் பந்தம் விட்டு போகவில்லை: தே.மு.தி.க., வேட்பாளர் விஜயபிரபாகரன்

விருதுநகர் : எனக்கும், விருதுநகருக்கும் பந்தம் விட்டு போகவில்லை. என விருதுநகரில் நடந்த பிரசாரத்தில் வேட்பாளர் விஜயபிரபாகரன் பேசினார்.விருதுநகர் சுப்பையா நாடார் அரசு பள்ளி முன், தந்தி மரத்தெரு, முத்துராமன்பட்டி, அல்லம்பட்டி, பாரதிநகர், முக்கு ரோடு, பாத்திமா நகர், நகராட்சி அலுவலக ரோடு, மேலத்தெரு தேவர் சிலை, மாலையில் கூரைக்குண்டு, சூலக்கரை அதை சுற்றியுள்ள பகுதிகளில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடன் ஓட்டு சேகரித்தார்.விஜயபிரபாகரன் பேசியதாவது: மக்கள் இந்த கூட்டணியை தவற விடக்கூடாது. விஜயகாந்த் நம்மை விட்டு சென்று நுாறு நாட்கள் கூட ஆகவில்லை. எவ்வளவு துக்கம் இருந்தாலும் இப்போது தேர்தலை சந்திக்க வேண்டியது எனக்கானகாலத்தின் கட்டாயம். என்னை பார்த்து கொள்ள வேண்டியது நீங்கள் தான். இது என் ஊர். என் மண். நீங்கள் எல்லோரும் என் சொந்தக்காரர்கள்.மக்களான நீங்களும், நானும் ஒன்றாக செயல்பட வேண்டும். முரசு சத்தம் விருதுநகர் லோக்சபா தொகுதி முழுவதும் ஒலிக்க வேண்டும். எனக்கும், விருதுநகருக்கும் பந்தம் விட்டு போகவில்லை. காலத்திற்கும் அழியாத பந்தம் இது. மேலும் மத்திய அரசின் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் நல்ல முறையில் கிடைக்க பாடுபடுவேன்என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை