ரயிலுக்கு வரவேற்பு
அருப்புக்கோட்டை: காரைக்குடியில் இருந்து மைசூர் வரை அறிவிக்கப்பட்டு இருந்த சிறப்பு ரயில் தற்போது செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று முதன்முறையாக மைசூரிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக செங்கோட்டை செல்லும் ரயிலுக்கு நேற்று மதியம் 1:25 க்கு அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் ரயில் பயணிப்போர் சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர்.ரயில் ஓட்டுனருக்கு சால்வை அணிவித்தும், ரயிலில் வந்த பயணிகளுக்கு கடலை உருண்டைகள் வழங்கினர். ரயில் பயணிப்போர் சங்க தலைவர் ஆனந்தன், செயலாளர் சரவணன், ஆலோசகர் மனோகரன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.