உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காட்டு மாடு முட்டி மூதாட்டி பலி

காட்டு மாடு முட்டி மூதாட்டி பலி

சேத்துார்:விருதுநகர் மாவட்டம் சேத்துார் அருகே புல் அறுக்க சென்ற சுந்தரம்மாள் 65, காட்டு மாடு முட்டி பலியானார்.சேத்துார் அருகே கணபதி சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்த அண்ணச்சாமி மனைவி சுந்தரம்மாள். மகன் அலெக்சாண்டர் உடன் வசித்து வந்தார். இருவரும் புல் அறுக்க மலையடிவார பகுதி பங்களா காடு அருகே சென்றனர். அங்கு சேகரித்த புல் கட்டை மகன் அலெக்சாண்டர் சைக்கிளில் வீட்டில் கொண்டு வந்து சேர்த்து விட்டு திரும்பிச் சென்ற போது சுந்தரம்மாள் வயிற்றில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் கிடந்தார். வனத்துறையினர், போலீசார் விசாரணையில் காட்டு மாடு முட்டியதில் ரத்தம் வெளியேறி இறந்திருக்கலாம் என தெரிவித்தனர். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ