மேலும் செய்திகள்
ஆண்டு விழா
05-Mar-2025
ராஜபாளையம் : ரோட்டரி கிளப் ஆப் ராஜபாளையம் கிங் சிட்டி, இயந்திரன் எட்ஜ் அமைப்பு, ஏசிஐசி கலசலிங்கம் இனோவேஷன் சார்பில் வாகை சூடவா எனும் தலைப்பில் மகளிர் தின விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக வாய்ஸ் ஆப் தமிழ்நாடு அறக்கட்டளை தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி கலந்து கொண்டார்.இதில் பெண்கள் தொழில் தொடங்குவது, முதலீட்டு வாய்ப்புகள், நிதி மேலாண்மை, வணிக தொடர்புகள் விரிவு படுத்துவது உள்ளிட்ட தேவையான வழிகாட்டுதல்களை இயந்திரன் அமைப்பின் தலைவர் காருண்யா குணவதி விளக்கினார். ரோட்டரி தலைவர் ராஜவேல் வரவேற்றார். துணை ஆளுநர் சிவகுமார் ராஜா, செயலர் சங்கிலி விக்ரம் குமார் வாழ்த்தி பேசினர். ஏற்பாடுகளை ரோட்டரி முன்னாள் தலைவர் வள்ளிநாயகம் செய்திருந்தார்.
05-Mar-2025