மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு முடுக்கு தெருவை சேர்ந்தவர் மனோஜ் குமார் 23, சென்னையில் வேலை பார்க்கிறார். கோயில் திருவிழாவிற்காக வத்திராயிருப்பு வந்த இவர் நேற்று அதிகாலை 1:30 மணிக்கு தங்கள் தெருவில் உள்ள வீர காளியம்மன் கோயிலில் திருவிழாவிற்கு வேப்பிலை தோரணம் கட்டும்போது, மின்சார வயர் மீது தவறுதலாக கை பட்டதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். வத்திராயிருப்பு போலீசார் விசாரித்தனர்.