உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குற்ற வழக்குகளில் தொடர்புடைய 11 பேர் கைது

குற்ற வழக்குகளில் தொடர்புடைய 11 பேர் கைது

சிவகாசி: சிவகாசி போலீஸ் ஸ்டேஷனில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 11 பேரை ஒரே நாளில் போலீசார் கைது செய்தனர். சிவகாசியில் கடந்த மாதம் ஒரே வாரத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 இளைஞர்கள் முன் விரோதம் காரணமாக அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து இரு வாரங்களுக்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றப்பின்னணி கொண்ட 23 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சரித்திர பதிவேட்டு குற்றவாளிகள் 11 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதுகுறித்து டி.எஸ்.பி., பாஸ்கர் கூறுகையில்: சிவகாசியில் குற்ற சம்பங்களை தடுக்கும் பொருட்டு சரித்திர பதிவேட்டு குற்றவாளிகளிடம் உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். எஸ்.பி., உத்தரவில் கடும் குற்றப்பின்னணி உள்ளவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ