சாத்துாரில் வெறி நாய்க்கடி தொல்லை தினமும் 20 பேருக்கு சிகிச்சை
சாத்துார்: சாத்துாரில் வெறிநாய்க்கடியால் தினமும் 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சாத்துார் சுற்று கிராமங்களில் வெறிநாய்க்கடியால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு நாள் தோறும் 20 பேர் வெறி நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருகின்றனர்.இதுகுறித்து சாத்துார் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் முனி சாயி கேசவன் கூறியதாவது: நாய் கடிக்கு சாதாரணமாக அளிக்கப்படும் ஊசி அரசு மருத்துவமனையில் போடப்படுகிறது. தற்போது வெறி நாய் கடி பாதிப்பு அதிகமாக உள்ளது. வெறி நாய் கடி பாதிப்புக்கு உடனடியாக வேலை செய்யக்கூடிய இமுனோ க்ளோபின் ஊசி உடனடியாக நாய் கடித்தவர்களுக்கு செலுத்தப்பட வேண்டும்.வெறி நாய் கடித்த இடத்தை சுற்றிலும் இந்த ஊசி போடப்படும். உயிர் காக்கும் மருந்தாகும்.தற்போது நாய் கடியால் சராசரியாக 20 பேர் சிகிச்சைக்காக வருகின்றனர். இமுனோகுளோபின் மருந்து மாவட்டமருத்துவமனையில் மட்டுமே இருந்தது. தற்போது சாத்துார் அரசு மருத்துவமனையில் தருவிக்கப்பட்டு உள்ளது. வெறி நாய் கடிக்கு ஆளானவர்கள் தாமதம் செய்யாமல் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.