உள்ளூர் செய்திகள்

20 பவுன் நகை மாயம்

விருதுநகர்: விருதுநகர் சத்திரரெட்டியப்பட்டி ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் 56. இவர் விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் துாய்மை பணியாளராக பணிபுரிகிறார். இவரது மனைவி திருத்தங்கல் அரசு பள்ளியில் தையல் ஆசிரியராக பணிபுரிகிறார்.இவர் நேற்று காலை 7:00 மணிக்கு வீட்டின் பீரோவில் சேலையை மடித்து வைக்கும் போது லாக்கரில் இருந்த 20 பவுன் தங்க நகை மாயமானது தெரிந்தது. ஆனால் பீரோ, லாக்கரின் பூட்டு உடைக்கப்படவில்லை. இது குறித்து விருதுநகர் ஊரகப் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை