உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பிப்ரவரி மாதத்திற்குள் 2000 புதிய குட்டைகள்

பிப்ரவரி மாதத்திற்குள் 2000 புதிய குட்டைகள்

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்குள் 2000 புதிய குட்டைகள் அமைப்பதற்கான பணியை மாவட்டம் நிர்வாகம் செய்து வருகிறது என சாத்தூர் ராமச்சந்திரன் தகவல் கூறினார்.விருதுநகர் மாவட்டத்தில் நிலத்தடி நீரை உயர்த்த, கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதற்கும் புதியதாக 2000 குட்டைகள் தோண்ட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி அருப்புக்கோட்டை அருகே தொட்டியாங்குளம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 27 லட்சம் ரூபாயில் 2 குட்டைகள் வெட்டப்பட்டது. 500 ஆவது குட்டையாக வெட்டப்பட்டு நிறைவு செய்த இதன் பணிகளை கலெக்டர் ஜெயசீலன் தலைமையில், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் பேசுகையில், விருதுநகர் மாவட்டத்தில் 2000 சிறிய அளவிலான குட்டைகள் வெட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு தற்போது 500 ஆவது குட்டையை நிறைவு செய்துள்ளோம்.பிப்ரவரி மாதத்திற்குள் முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டு விடும். நீர் நிலைகளை மேம்படுத்த 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வறட்சியான மாவட்டம். இங்கு அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்க, கால்நடைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, இது போன்ற தண்ணீர் குட்டைகள் அமைக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !