உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 2023ல் தண்டனையில் முடிந்த வழக்குகள் 107 எஸ்.பி., தகவல்

2023ல் தண்டனையில் முடிந்த வழக்குகள் 107 எஸ்.பி., தகவல்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 2023ல் மட்டும் 107 வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளதாக எஸ்.பி.,ஸ்ரீனிவாச பெருமாள் கூறினார். மேலுர் அவர் கூறியதாவது: மாவட்டத்தில் 2023 ஜன. 1 முதல் டிச. 31 வரை ஓராண்டில் 76 கொடுங்குற்ற சொத்து வழக்குகள் பதியப்பட்டு அதில் 63 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.1 கோடியே 9 லட்சத்து 85 ஆயிரத்து 602 மதிப்புள்ள சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 498 திருட்டு வழக்குகளில் 333 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அதில் திருடுபோன ரூ.2 கோடியே 16 லட்சத்து 50 ஆயிரத்து 580 மதிப்புள்ள சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.58 கொலை வழக்குகளில் 134 பேர் கைது செய்யப்பட்டனர். 2023ல் மட்டும் 107 வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளது. இதில் 57 வழக்குகளில் ஆயுள் தண்டனையும், 13 வழக்குகளில் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 16 வழக்குகளில் 7 ஆண்டுகள் சிறை, 6 வழக்குகளில் 5 ஆண்டுகள் சிறை, 15 வழக்குகளில் 3 ஆண்டுகள் சிறை வாங்கி தரப்பட்டுள்ளது.59 போக்சோ வழக்குளில் 8 வழக்குகளுக்கு சாகும் வரை தண்டனை, 21 வழக்குகளில் 20 ஆண்டுகள் சிறை, 2 வழக்குகளில் 10 முதல் 15 ஆண்டுகள் சிறை, 10 வழக்குகளில் 5 முதல் 9 ஆண்டுகள் சிறை, 18 வழக்குகளில் 5 ஆண்டுகளுக்கு குறைவான சிறை தண்டனைகள் பெற்று தரப்பட்டுள்ளன. 1892 பிடிவாரண்ட்களில் 1394 நிறைவேற்றப்பட்டுள்ளது. 498 புகையிலை வழக்குகள் பதியப்பட்டு 624 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 344 வழக்குகள் நீதிமன்ற தண்டனையில் முடிந்துள்ளன. 3 லட்சத்து 75 ஆயிரத்து 534 வாகன மட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள் 4367 பதியப்பட்டுள்ளன. அபராதமாக ரூ.36 கோடியே 4 லட்சத்து 550 விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் பணம் இழந்ததில் சைபர் கிரைம் போலீசார் மூலம் 2022, 2023 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் ரூ.85.87 லட்சமும், 150 அலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி