மேலும் செய்திகள்
கும்மிடியில் கடமைக்கு நடந்த கூட்டம்
31-Jan-2025
விருதுநகர்: விருதுநகர் நகராட்சியில் சாதாரணக் கூட்டத்தில் வைக்கப்பட்ட 26 தீர்மானங்களும் ஒத்தி வைக்கப்பட்டது.விருதுநகர் நகராட்சி சாதாரண, அவசரக் கூட்டம் நகராட்சி தலைவர் மாதவன் தலைமையில் நடந்தது. கமிஷனர் சுகந்தி, பொறியாளர் எட்வின்பிரைட்ஜோஸ் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நடந்த விவாதம்:சாதாரணக் கூட்டத்திற்கான மன்றப் பொருளை 6 நாட்களுக்கு முன்பு கவுன்சிலர்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் இரு நாட்களுக்கு முன்பு தான் மன்ற கவுன்சிலர்களுக்கு வழங்கப்பட்டது. இது அரசு விதிமுறைகளின் படி தவறு. எனவே சாதாரண கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என கவுன்சிலர்கள் ஆறுமுகம், ஜெயக்குமார் ஆகியோர் வலியுறுத்தினர். இதையடுத்து 26 தீர்மானங்களும் ஒத்தி வைக்கப்பட்டது. பின், அவசரக் கூட்டம் துவங்கப்பட்டது.அப்போது தனது வார்டில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதாக இரு பாட்டில்களில் தண்ணீரைப் பிடித்துக் கொண்டு வந்து காண்பித்தார் காங். கவுன்சிலர் ராஜ்குமார்.மாதவன், நகராட்சி தலைவர்: பல நாட்களாக உங்கள் வார்டில் பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் பணிகள் நடக்கிறது. ஒரு சில நாட்களில் பணிகள் நிறைவடையும். பின் இப்பிரச்சனை இருக்காது.பால்பாண்டி, காங்.: வயதானவர்கள் இறந்து விட்டால், அவர்களுக்கு மருத்துவர்கள் சான்றிளிக்க மறுக்கின்றனர். இதனால் இறப்புச் சான்று பெற முடியாத நிலை உள்ளது. எனவே விதிமுறைகளில் திருத்தம் செய்து விரைந்து இறப்புச் சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒரு சில தீர்மானங்களைத் தான் தலைவர் கொண்டு வர முடியும். ஆனால், ஏராளமான தீர்மானங்களை தலைவர் இக்கூட்டத்தில் கொண்டு வந்துள்ளார். இதனை ஏற்க முடியாது என சரவணன் உள்ளிட்ட அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.ஆறுமுகம், தி.மு.க.,: ரயில்வே பீடர் சாலையில் உள்ள கட்டணக் கழிப்பறைக்கான டெண்டரை ரத்து செய்து இலவச கழிப்பிடமாக மாற்ற வேண்டும்.ஜெயக்குமார், மார்க்சிஸ்ட்: ரூ.2.25 லட்சம் செலவில் மின்மாற்றியைச் சுற்றி வேலி அமைத்து திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. அது பொது மக்கள் பார்க்கும் வகையில் இல்லை. எனவே அதை நகராட்சி அலுவலக சுவர்களில் அமைக்க வேண்டும்அவசரக் கூட்டத்தில் வைக்கப்பட்ட 31 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.இவ்வாறு விவாதம் நடந்தது.
31-Jan-2025