உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 2வது கரிசல் இலக்கிய திருவிழா நாளை துவக்கம் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பங்கேற்பு

2வது கரிசல் இலக்கிய திருவிழா நாளை துவக்கம் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பங்கேற்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தின் 2வது கரிசல் இலக்கிய திருவிழா நாளை(டிச. 14) துவங்குகிறது. தென்மாவட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள் பலர் பங்கேற்கின்றனர்.கரிசல் இலக்கியத்தையும், கரிசல் பண்பாட்டை வருங்காலச் சந்ததிகள்அறிந்து கொள்ளவும் , இது பற்றிய ஆர்வத்தை மாணவர்களிடையே ஏற்படுத்த கரிசல் இலக்கியத் திருவிழா கொண்டாடப்படுகிறது. 2வது ஆண்டாக நாளை(டிச. 14), நாளை மறுநாள்(டிச. 15) சிவகாசி மாஸ்டர் பிரிண்டர்ஸ் அரங்கத்தில் காலை 9:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது.கலெக்டர் ஜெயசீலன் தலைமையில், எம்.பி., கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன் ஆகியோர் காலை 9:00 மணிக்கு துவக்கி வைக்கின்றனர். இரண்டு அரங்குகளில் நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதில் அரங்கு 1ல் எழுத்தாளர்கள் மதிகண்ணன், தமிழ்செல்வன், கவிஞர் மதுமிதா,எழுத்தாளர்கள் சோ.தர்மன், நாறும்பூநாதன், ரவீந்திரன், விஜிலா தேரிராஜன், கா.சி.தமிழ்க்குமரன், அன்னக்கொடி பேசுகின்றனர்.எழுத்தாளர் நந்தன் கனகராஜ், கவிஞர் கண்மணிராசா, ஆண்டாள் பிரியதர்ஷினி , அரிமளம் சு.பத்மநாபன், நாடகவியலாளர் பிரளயன் பேசுகின்றனர். அரங்கு -2ல் கரிசல் நாவல் என்ற தலைப்பில், கிளிராஜ் தலைமையில், எழுத்தாளர் மணிமாறன், கவிஞர் அகிலா கிருஷ்ணமூர்த்தி பேசுகின்றனர்.2ம் நாளான டிச. 15ல் அரங்கு -1ல் எழுத்தாளர்கள் இரா.முருகவேள், சா.தேவதாஸ், பா.ஆனந்தகுமார், கவிஞர் சமயவேல் கவிஞர்கள் மு.செல்லா, நெல்லை ஜெயந்தா, லிபி ஆரண்யா, நாடகவியலாளர் பேரா. ஆனந்தபாஸ்கர் பேசுகின்றனர்.இலக்கிய உரைகள், கலை நிகழ்ச்சிகள், கண்காட்சி அரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. எனவே பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களும், இலக்கிய ஆர்வமுள்ளவர்கள், படைப்பாளிகள், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ