உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 3200 கிலோ ரேஷன் துவரம் பருப்பு பறிமுதல்

3200 கிலோ ரேஷன் துவரம் பருப்பு பறிமுதல்

அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கடத்தி செல்லப்பட்ட 3 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் துவரம் பருப்பை குடிமை பொருள் தாசில்தார் அறிவழகன் மற்றும் உணவுப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.அருப்புக்கோட்டையில் தாசில்தார், ஆர்.ஐ., சசிக்குமார், அலுவலர்கள் மற்றும் உணவுப்பொருட்கள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்திய போது டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அதிகாரிகள் வாகனத்தை சோதனையிட்ட போது அதில் 3 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் துவரம் பருப்பு 60 மூடைகளில் இருந்தது தெரிந்தது. துாத்துக்குடியில் இருந்து விருதுநகருக்கு அந்த துவரம் பருப்பை கடத்தி செல்லயிருந்ததும் தெரிந்தது. நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் துவரம் பருப்பு மூடைகள் ஒப்படைக்கப்பட்டன. வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டு டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ