உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மறியல் போராட்டம்  34 பேர் கைது

மறியல் போராட்டம்  34 பேர் கைது

விருதுநகர்: விருதுநகரில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தோணிராஜ் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் விக்னேஷ், சுரேஷ்பாண்டி, பிச்சைமணி, பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன், துணை தலைவர் கண்ணன் பேசினர். மாநில இணை ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் நன்றி கூறினார். கலெக்டர் அலுவலகத்தை மறியல் செய்ய முயன்று 4 பெண்கள் உட்பட 34 பேர் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை