உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இடியும் நிலையில் 3500 துணை சுகாதார நிலையங்கள் அச்சத்தில் செவிலியர்கள்

இடியும் நிலையில் 3500 துணை சுகாதார நிலையங்கள் அச்சத்தில் செவிலியர்கள்

விருதுநகர், : தமிழகத்தில் 3500 துணை சுகாதார நிலையங்கள் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் செவிலியர்கள் அச்சத்துடன் பணியாற்றுகின்றனர். தமிழகத்தில் ஒவ்வொரு 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு துணை சுகாதார நிலையம் என்ற அடிப்படையில் தற்போது 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளது. இதில் பணியாற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கு அதை ஒட்டிய இடத்தில் குடியிருப்பும் உள்ளது.ஆனால் இவற்றில் 3500 துணை சுகாதார நிலையங்களில் கூரை, தளம் சேதம், சுவர்களில் விரிசல் என இடிந்து விழும் நிலையில் உள்ளன. குடியிருப்புகளும் அதே நிலையில் இருப்பதால் செவிலியர்கள் வசிப்பதில்லை. சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதலாக துணை சுகாதார நிலையங்கள் கட்டப்படுகின்றன. ஆனால் பழைய துணை சுகாதார நிலையங்களை பராமரிக்க நிதி வழங்கப்படுவதில்லை.பணியாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் ஒரு செவிலியர் இரண்டு, மூன்று துணை சுகாதார நிலையங்களுக்கு கூடுதல் பணியாக சென்று வருகின்றனர். எனவே தமிழகத்தில் இடியும் நிலையில் உள்ள துணை சுகாதார நிலையங்களை புதிதாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.செவிலியர்கள் கூறியதாவது: கிராமத்தில் உள்ள கர்ப்பிணிகளின் விவரம், பரிசோதனை, மருந்து குறித்து ஆன்லைனில் பதிவேற்றுதல், மக்களை தேடி மருத்துவம், குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் உள்பட பல பணிகளில் கிராம சுகாதார செவிலியர்கள் ஈடுபடுகின்றனர். துணை சுகாதார நிலைய கட்டத்தின் சேதம் குறித்து அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை