ரயிலில் 4.4 கிலோ கஞ்சா கடத்தல்
விருதுநகர் : -விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனிற்கு மேற்கு வங்கத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் 22605 புருலியா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு வந்தது. இதில் எஸ்.9 பொதுப்பெட்டியில் இருக்கை எண் 10க்கு அடியில் 4.457 கிலோவில் இரு கஞ்சா பண்டல்கள் கருநீல நிறத்திலான பேக்கில் இருப்பதை விருதுநகர் ரயில்வே போலீசார் சோதனையில் கண்டறிந்தனர். இவற்றை ராமநாதபுரம் மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.