உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு மருத்துவமனைக்கு 50 மர பெஞ்ச் நன்கொடை

அரசு மருத்துவமனைக்கு 50 மர பெஞ்ச் நன்கொடை

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு ஐ.டி.பி.ஐ., வங்கி மூலம் ரூ. 3 லட்சத்தில் 50 மர பெஞ்ச்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் மூன்று பேர்கள் அமரக்கூடிய நாற்காலிகளில் அதிகமான நபர்கள் அமர்வதால் பாரம் தாங்காமல் தொடர்ந்து சேதமாகியது. இவற்றை பழுது நீக்கி, வெல்டிங் வைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகள் நடக்கிறது. மேலும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் உள் நோயாளிகளை உடன் இருந்து பார்த்துக்கொள்பவர்கள் பலர் காத்திருப்பு பகுதியில் தரையில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டது. மருத்துவமனை டீன் ஜெயசிங் நடவடிக்கையால் ஐ.டி.பி.ஐ., வங்கி மூலம் சி.எஸ்.ஆர்., நிதியில் ரூ.3 லட்சத்தில் 50 மர பெஞ்ச்கள் நன்கொடையாக பெறப்பட்டது. இவைகள் உள்நோயாளி பிரிவுகளில் காத்திருப்பு பகுதிகளில் அமைக்கப் படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி