நாய் கடித்து 7 பேர் காயம்
சாத்துார்: சாத்துார் அருகே சத்திரப்பட்டியில் ஒரே நாளில் ஏழு பேர் நாய்கள் கடித்து காயம் அடைந்தனர்.சாத்துார் ஊராட்சி ஒன்றியம் சத்திரப்பட்டி ஊராட்சியில் நேற்று ஒரே நாளில் 7 பேரை நாய்கள் கடித்து காயப்படுத்தின. தெரு நாய்களோடு வீட்டில் வளர்க்கும் நாய்கள் சேர்ந்து பழகியதால் வீட்டில் வளர்ந்து வந்த நாய்களுக்கும் வெறி பிடித்து வளர்த்தவர்களையே கடித்தது தெரியவந்துள்ளது.சத்திரப்பட்டி சேர்ந்த சிவா, கற்பகம், வள்ளி, உள்ளிட்ட ஏழு பேர் அரசு மருத்துவமனையில் நாய் கடிக்கான சிகிச்சை பெற்று வீட்டுக்கு சென்றனர்.சாத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் உலா வரும் அனைத்து நாய்களுக்கும் ரேபிஸ் நோய் தடுப்பூசி போட வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.