ராஜபாளையத்தில் 7.2 செ.மீ., மழை
விருதுநகர்: விருதுநகர் மாவட் டத்தில் நேற்று அதிக பட்சமாக ராஜபாளை யத்தில் 7.2 செ.மீ., மழை பெய்தது. நேற்று மாவட்டத்தில் அதிகாலையில் பரவலாக மழை பெய்தது. அதன் பின் மழை மேகம் இருந்தது. மதியம் 2:30 மணியில் இருந்து சாரல் மழை ஒரு மணி நேரம் பெய்தது. நேற்று காலை 8:00 மணி வரை பதிவான மழையளவு(மி.மீ.,ல்) திருச்சுழி 9, காரியாபட்டி 19.60, ஸ்ரீவில்லிபுத்துார் 25, விருதுநகர், சாத்துார், சிவகாசி தலா 5, பிளவக்கல் 57.60, வத்திராயிருப்பு 49.80, கோவிலான்குளம் 4.80, வெம்பக்கோட்டை 3.50, அருப்புக்கோட்டை 8, அதிகபட்சமாக ராஜ பாளையத்தில் 72 மி.மீ., அதாவது 7.2 செ.மீ., அளவு மழை பதிவாகி உள்ளது. 9 வீடுகளில் சிறு சேதம் ஏற்பட்டுள்ளது. நகர், ஊரக பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.