நாய்கள் கடித்து 8 பேர் காயம்
நரிக்குடி : விருதுநகர் மாவட்டம் நரிக்குடி உலக்குடியைச் சேர்ந்த பிரபாகரன் மகன் சாய் செழியன் 4. யூ.கே.ஜி., படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்று விட்டு தெருவில் நடந்து சென்ற போது, அங்கு கூட்டமாக நின்றிருந்த நாய்கள் சிறுவனை துரத்தி கை, கால், உடலில் கடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. நரிக்குடி மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டது. இதைத் தொடர்ந்து. அங்கு சுற்றித்திரிந்த தெருநாய்கள் தனராஜ், குருவம்மாள், சரவணன் உட்பட 7 பேரை கடித்ததில் காயம் அடைந்தனர்.