உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காப்பீடு பதிய காத்திருக்கும் கூடத்தில் மின்விசிறியை கழட்டியதால் அவஸ்தை

காப்பீடு பதிய காத்திருக்கும் கூடத்தில் மின்விசிறியை கழட்டியதால் அவஸ்தை

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் காப்பீடு பதிய காத்திருக்கும் கூடத்தில் மின்விசிறியை கழட்டியதால் புழுக்கத்தால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிய மக்கள் வருகின்றனர்.இவர்கள் காத்திருக்கவும், நிழலில் உட்காரும் வகையில் 2023ல் கலெக்டர் மேகநாதரெட்டி தனது விருப்புரிமை நிதியில் இருந்து கல் இருக்கைகள் கொண்ட காத்திருப்பு கூடத்தை கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு அளித்தார். இதில் மின் விசிறிகள் பொருத்தப்பட்டிருந்தன. கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் உள்ளிட்ட மற்ற நேரங்களில் வருவோருக்கு இந்த இடத்தில் காத்திருப்பது ஆறுதலாக இருந்தது. 3 மாதங்களாக இந்த கூடங்களில் ஒன்றில் மின் விசிறி கழட்டப்பட்டு விட்டது.தற்போது வரை போடப்படவில்லை. தற்போது கோடை நெருங்கி வருவதால்மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். நிழலுக்காக ஒதுக்கினாலும், மேலே உள்ள தகர ஷீட்டில் இருந்து அதிக வெப்பம் கடத்தப்படுவதால் புழுக்கம் தாங்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.எனவே மீண்டும் மின்விசிறியை மாட்ட வேண்டும். வெப்ப பாதிப்பை தவிர்க்க மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கும் நாட்களில் கலெக்டர் அலுவலகத்தில் ஆங்காங்கே மண்பானையில் குடிநீர் வைத்தால் முதியவர்கள் பயன்பெறுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை